எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோவிலின் காலை பூஜை ஆரம்ப மணி கேட்டதும் வாசலுக்கு...

கோவிலின் காலை பூஜை ஆரம்ப மணி கேட்டதும் வாசலுக்கு வந்துவிடுவேன் 
பூஜை மணி கேட்கவும் நீயும் வந்துவிடுவாய் 
கண்மூடி எல்லோரும் கடவுளை வழிபட 
கண்மூடாது உன்னையே பார்ப்பேன் 
சிறு நிமிடத்தில் நீ கண்திறக்கும் போது உன் பார்வையில் படும்படி நிற்கச் செய்வேன் 
உன் எதிரில் நிற்கும் என்னை ஒரு வினாடி பார்த்து பின் சென்றுவிடுவாய் 
அந்த வினாடி பார்வையிலே தான் ஒரு நாள் கடந்து போகும் 
கண் மட்டும் பேசியே கடந்த காதல்கதைகளின் சந்தோசங்கள் எல்லாம் 
கைபேசி காதல்களில் இல்லை 
இப்போதும் கூட கோயில் மணி ஓசை எங்களிடம் காதல் கதை பேசும்

பதிவு : கௌரீஷன்
நாள் : 5-Apr-21, 10:29 pm

மேலே