எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இராவணனின் காதல்...!! இலங்காபுரியில் ஒரு இராவணன் பாரத சீதையின்...

இராவணனின் காதல்...!!


இலங்காபுரியில்

ஒரு இராவணன்

பாரத சீதையின்

கடைவிழிப் பார்வைக்கு

ஏங்கி...!!!

பத்துத் தலைகள் இல்லை

இது ஒரு தலைக்காதல்...!!!


அவள் அனுமதி இன்றி

சிறை வைத்தான்

மனதுள்...!!

ஆனால் அவள்

அனுமதிக்காய் காத்திருந்தான்

ஆயுள் முழுதும்...!!!!


புராண சம்பிரதாயதில்

புளன்ற சமூகம்

இராவணனின் காதலில்

ஆயிரம் வழுக்களை

அடுக்கியது...!!

கவியில் எழுத்துவழுக்கள்

மாற்றப்பட கூடியன

காதலில் வாழ்வில் வழுக்கள்

எப்படி மாற்றப்பட கூடியதுவோ...!!!


இவன் இராவணன்

காலம் முழுதும்

காதல் செய்வான்...!!

காதலிற்க்காக போரும்

செய்வான்...!!!

உயிரும் துறப்பான்...!!

ஒற்றை வார்த்தைக்காய்

ஓயாது உழைப்பான்...!!


சிறு வார்த்தையில் கூட

அவளை தீயிலிட மாட்டான்

பிறர் வார்த்தைகள் கேட்டு

அவளை தீமிதிக்க விடமாட்டான்...!!!


இராமனைப்போல்....!!!


SathyaPireyan VijayaMaran


பதிவு : Sathyapireyan
நாள் : 8-Sep-21, 8:22 pm

மேலே