எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் அழைத்து நீ பதில் அளிக்கும் நிலையிலே நாம்...

நான் அழைத்து
நீ பதில்
அளிக்கும் 
நிலையிலே
நாம் உறவு 
முறிந்திருக்கலாம்...!!!
எப்போது வேண்டுமானாலும்
உன்னிடம் 
என் சோகங்களை
சந்தோஷங்களை
வெற்றி தோல்விகளை
பகிர்ந்துகொள்ளலாம்
என்ற 
நம்பிக்கையில்
வாழ்ந்திருப்பேன்....!!!!
அது காதலாகவோ
நட்பாகவோ 
எதோ தெரிந்த ஒருவனாகவோ
எங்கேயோ பார்த்த ஒருவனாகவோ
ஓர் ஓரமாய் 
உன் நினைவில்
நான்
இருந்திருப்பேன்...!!!

அந்தப் பெருங்கடல்
காதலினை
என் கவிதைத்துளிகளில்
உணர்த்தி
அப்பப்போது மகிழ்ந்திருப்பேன்...!!!

உன் தூரம் உணரும் 
போதெல்லாம்
உயிர் துடிக்கும் 
வலிகளை 
உணராமல் இருந்திருப்பேன்...!!!

இதுதான் 
இறுதி வார்த்தையென்று
அறியாமலே
கனத்த மொழிகளை
பரிசளித்தேன்...!!!
காதலை உணர்த்தும்
படலத்தில்
காயங்கள் தான்
அளித்தேன்...!!
மீண்டும் ஒருமுறை
வாய்க்கப்பெற்றால்
கவிதைகளில்
பதிலளிப்பேன்....!!!

மீண்டும் ஒருமுறை...!!

பதிவு : Sathyapireyan
நாள் : 29-Jun-22, 12:33 pm

மேலே