வஞ்ச புகழ்ச்சி அணியாய் காதல்...!!!

என்னை அவள்
உயிரென்றும்,
உயிரில் பாதி என்றும்,
நானின்றி அவளில்லை என்றும்,
மூச்சிற்கு முன்னூறு முறை
கூறியது ஒரு காலம்...!!!
என்னை துறந்துவிட்டு,
முழுவதும் மறந்துவிட்டு,
என்னுயிருடன் பறந்துவிட்டு,
கூறுகிறாள் நீ யாரென்று...???
மனமுடைந்து அன்று முதல்
அவளை சபிக்க ஆரம்பித்தேன்
இப்படியாக,,
பூக்கள் பறிக்கப்படுமுன்
அவளின் கூந்தல் ஏறவும்,
நிலா விடியும்வரை
அவளுக்கு மட்டும் தெரியவும்,
வானவில் இன்னும் வண்ணங்களை
அவளுக்கு காண்பிக்கவும்,
சாப்பிடாத போது மட்டுமே விக்கல்
அவளை தீண்டவும்,
அறைத்த மருதாணி
அவளின்றி சிவக்கவும்,
கவிதை எழுத துணிந்தால்
அவள் கற்பனையின்றி தவிக்கவும்,
இப்படியாக என்னை விட்டால்,
அவளை சபிக்க மறந்து,
என் வஞ்சம் தீர்க்க
புகழ்ந்துகொண்டிருப்பேன்
அவளின் உயிராக இருந்து..!!!!