ஒரு ஜீவனின் கண்ணீர்

ஆசி கேட்டு தலை சாய்க்கும்
அன்பருக்கெல்லாம் – அவர்
கொடுப்பது ஐம்பது பைசாவாயினும்
ஐந்நூறு ரூபாய்களாயினும்
பாரபட்சமில்லாது ஆசிகளை
அள்ளி வழங்கிவிட்டு
கிடைத்த பணத்தையெல்லாம்
பாகனுக்கு வழங்கிவிட்டு
மெல்ல சுவற்றோரம் சாய்கையில்
அதன் கண்களில் வழியும்
கண்ணீரை – அதன்
ஆசியில் ஆனந்தமாய்
கோயிலை விட்டுக்
கிளம்பும் எவரும்
அறிந்து இருக்க வாய்ப்பில்லை !!!