நீயின்றி நானில்லை...!!!

என்னை விட்டு பிரியாத உன் நினைவு
நீ எங்கு சென்றாலும் உன்னுடனே
கண்மூடி தனமாக வரும்..!!
உன்னுடைய அளவில்லா காதலும்
எனக்கு கோபமூட்டும்,
வேறு ஒருவருக்கு நீ காட்டும் போது..!!
அருகிலிருக்கும் போது புரியாத பிரியம்
பிரியும் போது புரியும் என்பார்கள்.
அது முட்டாள்தனம் என்பதை
இப்போது புரிந்து கொண்டேன்..!!
நிமிட முள்ளுடன் பின் தொடர்ந்து
நானும் உன்னை நினைத்திருக்க,
நீயோ எனக்கென்ன என்பது போல்
சுழற்சியற்ற கடிகாரமாகி சிரிக்கிறாய்..!!
உன்னுடன் பேச கூடாதென
முடிவெடுத்த தருணங்கள் தான்,
உன்னுடன் நான் அதிகம் பேசி
கழித்த நாட்கள்..!!!
எத்தனை முறை நீ தவறு செய்தாலும்
காட்டிக்கொள்ளாதவன் போல்,
என்னை குற்றவாளியாக்கி
உன்னை சிரிக்க வைத்துள்ளேன்...!!
உன் வருகையை எதிர்நோக்கி,
இல்லாத நாட்களை கற்பனையில் உருவாக்கி,
உனக்காக அலைந்த பொழுதுகள்
மேகம் சூழ்ந்த வானமாகி விட்டது..!!
நீ நினைத்த போதெல்லாம்
நான் ஓடி வந்திருக்கிறேன்,
நான் நினைக்கும் போது மட்டும்
நீ ஓடி விடுகிறாயே...???