ஒரே கதாநாயகன்(அப்பா)....!!

நமக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து
தேர்வு செய்து தரும் அப்பாவுக்குள் தான்
எத்தனை கதாபத்திரங்கள்...!!
தலையில் எண்ணையிட்டு வழித்து சீவி,
கண்ணாடியை முறைத்து பார்த்து,
மீசை முறுக்கி நடக்கும் போது,
அப்பா- கதாநாயகன்..!!
அதிகம் பேசாமல் பார்வை மட்டும் காட்டி
நாக்கை மடக்கி அடிக்க தெரியாதது போல்
தவறுகளுக்கு தண்டிக்கும் போது
அப்பா- அழகிய வில்லன்..!!
அவ்வளவு பெரிதாக இல்லை என்றாலும்
தன்னால் முடிந்த வரை ஏதோ சொல்லி,
பல் தெரியாமல் சிரிக்கும் போது
அப்பா- நகைச்சுவை நடிகன்..!!
அனுபவங்களின் முழு உருவமாகி
எதற்கும் கலங்காத நெஞ்சமானாலும்,
நமக்கென துன்பம் வரும் போது
அப்பா- குணச்சித்திர நடிகன்.!!
தன் வயதை மறைத்து விட்டு
தனக்கும் வயதை இருபதாக்கி
நம் பாதைக்கு தோள் கொடுக்கும் போது
அப்பா- துணை நடிகன்..!!
வயது அதிகமாகும் நிலையில்
நம்முடன் பேச்சை மட்டும் குறைத்து
பாசம் அதிகம் வைத்து நிற்கும் போது
அப்பா- உச்ச நடிகன்..!!
எத்தனை பேர் வந்து சென்றாலும்
நாம் எப்போதும் திரும்பி பார்த்து
காதலிக்கும் ஒரே கதாநாயகன்
அப்பா...!!!