காதல் எந்திரன்...!!
மழை சிதறும் மாலை நேரம்,
காதல் வந்தது ஓர விழியோரம்,
கையிலிருந்து அவள் வானம் தூரம்,
மெதுவாய் என் மனம் நகரும்..!!
சத்தமின்றி நெஞ்சுக்குள் சிறு அலை,
கொல்லாமல் கொன்றிடும் ஓர் கொலை,
யாருக்கோ விரித்தாள் அவள் வலை,
தெரியாமல் விழுந்தது என் நிலை...!!
ரசவாதம் ஊறிய கண்கள் கொண்டு
வசியப்பார்வை வீசுகிறாள்..!!
நெஞ்சுக்குள் நெருப்பை மூட்டி
இதயம் அழிக்க பார்க்கிறாள்..!!
கதிர்வீச்சில் என்னை சிதைத்து
காதல் குருடனாக்கி ரசிக்கிறாள்..!!
மாய மந்திரம் புதிதாய் செய்து
அவளின் அடிமை ஆக்குகிறாள்..!!
தினமும் என்னை மாற்றி எனக்கே
அடையாளம் காட்டிவிட்டாள்..!!
உணர்ச்சிகளை அவள் தின்று
காதல் எந்திரன் ஆக்கி விட்டாள்..!!
பொய் பேச தெரியாத என்னை
பொய்யாய் மாற்றி விட்டாள்..!!
அவளை மட்டுமே நினைக்க வைத்து
காதல் சிறையில் பூட்டிவிட்டாள்..!!
நினைக்க வைத்தது அவள் என்றாலும்
நினைத்துகொண்டிருப்பது நானே...!!