கருத்துச் சுதந்திரம்(படைப்பாளிகளின் குரல்)...!!

மனதில் பட்டதை சொல்ல
யாருக்கும் பயப்பட தேவையில்லை..!!
நமக்கு முழு சுதந்திரம் உண்டெனில்
நம் கருத்துக்களுக்கும்
முழு சுதந்திரம் இருக்கிறது..!!

காக்கைக்கு தன் குஞ்சு போல
படைப்பவனுக்கு தன் படைப்பு
எப்போதும் எந்நிலையிலும் அழகு தான்...!!

தன் மனதில் உதிப்பதை,
காகிதத்தில் உதிர்ப்பதற்கு
யோசிக்க தேவையில்லை,
சிறு துணிச்சல் போதும்..!!

பரிசுகளை எதிர்நோக்கி,
எந்த படைப்புகளும்
உருவாக்கப்படுவதில்லை..!!
கலைஞனின் அறிவுப் பசியை
வெளிக்காட்டவே உருவாகிறது...!!

நல்ல படைப்பை பாராட்ட
ஒரு ரசிகனுக்கு
எவ்வளவு உரிமை இருக்கிறதோ,
அதே அளவு உரிமை
படைப்பில் குறை இருப்பின்
குறை சொல்வதிலும் வேண்டும்..!!
அப்போது தான் அப்படைப்பு
முழுமை பெற்று முதிர்கிறது...!!

ஏனோ தானோவென்று
எந்த படைப்பும் உருவாவதில்லை,
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் மட்டுமே
மூளை கருவில் உருவாகி
பிரசவிக்கபடுகிறது...!!

படைப்பாளிகளை பாராட்ட வேண்டாம்,
குறையாவது கூறுங்கள்
அதுவே அவர்களுக்கு போதும்
விருதுகள் தேவையில்லை...!!

எழுதியவர் : மனோ ரெட் (8-Jun-13, 10:29 am)
பார்வை : 76

மேலே