பட்டிக்காடும்,பட்டணமும்...!!!!!

அழகிய கிராமத்தில் காலையில்
கோழி கூவினால் மட்டுமே
பூமிக்கு நேரம் தெரியும்,
நிலவு போகும் வரை காத்திருந்து
சூரியன் அழகாய் மலரும்,
பறவைகள் தங்களின் திறமை
காட்டவே பாடல் பாடும்,
பெண்களின் வெக்கத்திலே
கோலம் பிறக்கும்,
ஆண்களின் வியர்வையிலே
செடிகள் முகம் துடைக்கும்,
காற்று கூட அமைதியாக மட்டுமே
சத்தம் போடும்...!!!
இது தான் கிராமம்
----------------------------------------------------------------------------
அலங்காரமாய் காட்டிகொள்ளும்
நகரத்தில் காலையில்,
வாகன சத்தம் கேட்டு தான்
பூமி கண் திறக்கும்,
நிலவை அடித்து விரட்டி விட்டு
சூரியன் சுட்டெரிக்கும்,
மனிதர்களிடம் இருந்து உயிர் பிழைக்க
பறவைகள் பாடல் மறந்திருக்கும்,
அடுக்கு மாடி பெண்களுக்கு
கோலம் போட கடினமாய் தெரியும்,
ஆண்கள் வியர்வையை வர வைக்க
எங்கேயோ ஓடி கொண்டிருக்கலாம்,
அமைதி என்பது எப்படி இருக்கும் என
தெரியாமலே மறைந்திருக்கும்..!!
இது தான் நரகம்
மன்னிக்கவும் நகரம்..!!!