பாவ மன்னிப்பு கிடைக்காது

சாபம் பலிக்கும் என்றால் உலகில் பாவிகளுக்கு இடமில்லை.
பாவத்திற்கு மேல் பாவம் செய்து வசிதியாய் வாழ்வோரை பாவம்
பாவம் ஒன்றும் செய்வதில்லை.

ஏமாந்தவர்கள் தான் பாவத்தின் கோரப்பசிக்கும் தீனியாகும்
இளிச்சவாயர்கள்! இவர்களுக்கு ஆறுல் வேண்டுதலே!

பலபேரைக் கெடுத்துப் பிழைக்கும் கோடீஸ்வரர்களும் நம்மிடையே.
அவர்க்கெல்லாம் பாவம் பாவமே அறியாப் பாவம்.

கெட்டவரைப் பரிகாரம் காப்பாற்ற சாத்திரம் சடங்கு எல்லாம் செய்திடுவார். இளிச்சவாயர்களும் கடன் வாங்கி பரிகாரம் செய்தாலும் ஒருபோதும் அவர் பாவம் கழியாது.

எச்சரிக்கையோடு புத்திசாலிகள் திட்டமிட்டுச் செய்யும் பாவம்
கேடுசெய்யும் ஏமாந்து இருப்பவர்க்கே. தீயைத் தீ சுடுவதில்லை தீயவர்க்கு அதிக கேடு வருவதில்லை. தீயவர்க்கே பாவ மன்னிப்பு போலும் அவர் திருந்தி வருந்திடவும் செய்வதில்லை.

மனிதரின் பாவத்தை இறைவன் மன்னிக்கலாம் பாவிகளும் நிம்மதியாய் வாழ்ந்திருக்கலாம். இயற்கைக்கு நாம் செய்யும் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது; தண்டிக்கவும் அவள்
தவறமாட்டாள். வறட்சி, வெள்ளம், பஞ்சம், உயரும் தட்ப வெப்பம். மாறிவிட்ட பருவ காலம். இதற்கெல்லாம் காரணம் மனிதனின் பேராசையே. திருந்தாத மனிதர்களால் அப்பாவிகளுக்கும் தண்டனை.

எழுதியவர் : மலர் (25-Jul-14, 10:22 am)
பார்வை : 321

மேலே