கனா காணும் காதல் காதல்

கனா காணும் காதல் காதல்
வினா வீசும் மோதல் மோதல்
விடை தேடும் சாதல் சாதல்
கனவு என்பதும் சுகம் தானே

கட்டி போட மனசு வல்ல
கேள்வி முழுதும் வெள்ள வெள்ள
கண்கள் முழுதும் கண்ணீர் மல்க
வெள்ளம் போல அறுவடை செய்ய
தூண்டில் புழுவாய் துடிகின்றேன்.

இது கண்ணீர் சிந்தும் பருவம்
இது காதலை தேடும் ஆர்வம்
இது முத்தங்கள் போடும் விரயம்
இது விதியை வீழ்த்தும் பருவம்
தினம் வீதியில் புரண்டே மடியும்
மனம் சுடுகிற தீயாய் எரியும்.

நிலவு காட்டும் வெளிச்சத்தில் உன்னிடம்
தனிமை மட்டும் பேசும் பெண்ணே
அறைகள் முழுதும் உன் பெயர் சொல்லி
மற கிழன்று நிற்கின்றேன்.

பார்க்கும் வழியில் எதோ வைத்து
என்ன செய்தாய் பெண்ணே பெண்ணே
தூண்டில் திண்ணும் மீனாய் நானும்
உன்னில் மாட்டி சாகின்றேன் .
-நா ராஜராஜன்

எழுதியவர் : நா ராஜராஜன் (27-May-15, 9:02 am)
பார்வை : 454

மேலே