யாவும் நீயாகவே

மேகத்தில் எழுதினேன்,
காதலை துளிகளாய்
மழை மேகம் பொழியவே
உன் மீது காதலாய்!
சரணத்தில் கோர்த்தேன்,
காதலை பல்லவியாய்
இசை கீதம் இசைக்கவே
உன் மீது காதலாய்!
காற்றினில் தூவினேன்,
காதலை சுவாசமாய்
சுவாசக் காற்று தீண்டவே
உன் மீது காதலாய்!
நிலவினில் கலந்தேன்,
காதலை ஒளி வெள்ளமாய்
தண்னொளி வீசவே
உன் மீது காதலாய்!
இரவுகளில் பதிந்தேன்,
காதலை கதைகளாய்
சொப்பணங்கள் செப்பவே
உன் மீது காதலாய்!
பாதைதனில் பரப்பினேன்,
காதலை சுவடுகளாய்
பயணங்கள் தொடரவே
உன் மீது காதலாய்!
காகிதத்தில் வடித்தேன்,
காதலை வரிகளாய்
கவிதைகள் மொழியவே
உன் மீது காதலாய்!..