எண்ணம்
(Eluthu Ennam)
சிறிய மனிதர்கள் பெரிய நிறுவனங்களை உருவாக்க முயற்சிக்கும்போது, அவர்கள் எப்போதும் அவர்களின் நடுத்தரத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் முடிவை அடைகிறார்கள்!!!
முயற்சி
முயன்று பழகிடு
முயல்வது முதற்படி
மிக உயரமான படிக்களுக்கும்
முதற்படியே மூலம்
முன்னேற துடிக்கும் நீ
ஏன் முயல மறுக்கிறாய் ?
இறுதி படியில் நின்று சிரிக்க நினைக்கும் நீ
ஏன் முதற்படி ஏற அழுகிறாய் ?
நோக்கம் எதுவென்று
முதலில் தீர்மானி
அதுவே இலக்கு
என்பதை உறுதிசெய்
கையில் பணமில்லையே
உடலில் வலு இல்லையே
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே
என்று எல்லாம்
யோசித்து நேரத்தை வீணாக்காதே
எதற்கும் பயப்படாதே
தயங்காதே
இலக்கை நோக்கி
அடியடுத்து வை
தொடர்ந்து முன்னேறு
சோதனைகள் விளகட்டோம்
பாதை தெளிவாகும்
நோக்கத்தை அடைந்தே
திருவாய்
அதை யாராலும் தடுக்க முடியாது
துள்ளி எழு
அடாத மழையிலும் விடாது
உழைக்கும் காளான் போல
தோல்வியில் இருந்து எழுவதுஅல்லவ வாழ்கை
யாருக்குத்தான் துயரம் இல்லை
துயரம் இன்றி உயரம் இல்லை
துன்பம் இன்றி இன்பம் இல்லை
அடிகளால் அனுபவம் கிடைக்கின்றன
அனுபவம் ஆசான் ஆகின்றன
வெற்றி என்பது வெற்று சொல்லன்று
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம் அன்று
மெய்விருத்தம் பாராமல்
மேனி நலம் பாராமல்
பசி நோகாமல்
கண் குஞ்சாமல்
தோல்விகளை கண்டு அஞ்சாமல்
தொடர்ந்து மேற்கொள்ளும்
அருண்செய்யல்
விந்தை விளைவே வெற்றி
முடியும் என்று மூச்சி விட்டு சொல்லு....
மூச்சி விடுவதற்குள் வெற்றி நிச்சயம்......
-விஜயன்...