எண்ணம்
(Eluthu Ennam)
"தோழி"வெளிப்படையான பேச்சு சலிப்படையாத குணம் அகத்திரையில் ஏதும் மறைக்காமல்... (மாஷிதா)
05-May-2018 5:35 pm
"தோழி"
வெளிப்படையான பேச்சு
சலிப்படையாத குணம்
அகத்திரையில் ஏதும் மறைக்காமல்
முகத்திற்கு முன் கூறிடுவாள்
ஆறுதல் கூறி நம்மை
ஆகாயம் கூட தொடவைப்பாள்
மாறுதல்கள் அத்தனையும்
சகாயமாய் தந்திடுவாள்
அடுத்தவர் எண்ணங்களை
தடையில்லாமல் புரிந்துகொள்வாள்
அறியாத மனங்களையும்
எடைப்போட்டு தெரிந்துகொள்வாள்
பாசம் காட்டுவதில்
ஒளியாக அரும்பிடுவாள்
வேஷம் போடுபவரை
துளி கூட விரும்பமாட்டாள்
தொடக்கத்தில் வேறுபாடு
தொட்டுவிட்டு போனாலும்
பழக்கத்தில் அவள் நட்பு
வழக்கமானது எனக்கு
தோழியே! என் நிழலாய்
நீ தொடர்ந்து வர வேண்டும்
வேலியாய் என் வாழ்வில்
நீ படர்ந்திட வேண்டும்
தோழி
உன் தோல் சாயும் நேரம்
என் மன சுமை காணாமல் போகுதடி ...................
பெண்ணே ...................................@!
தெரியாத உன்னிடம் இருந்து
தெரிந்த என் திறமைகளை காட்ட
இடம் அமைத்து கொடுத்தாய்
உன்னை புரிந்த எனக்கு
உன்னை பிரியும் பொழுது
ஏற்படும் வலியினை என்ன
சொல்லுவேன் என் இனிய தோழியே ............................