எண்ணம்
(Eluthu Ennam)
மௌனத்தை நோக்கி பயணம் செய்யாதவரை, இந்த சமூகத்தின் அலைகளால் மனிதன் மேலும் மேலும் வன்மத்தை நோக்கிதான் பயணம் செய்கிறான்.......
மௌனம்.... மனதுடன் பேசும் மொழி...எண்ண௩்களை செதுக்கும் சிற்பி.... புலன்களின்... (umababuji)
23-Apr-2021 11:21 am
மௌனம்....
மனதுடன் பேசும் மொழி...
எண்ண௩்களை
செதுக்கும் சிற்பி....
புலன்களின் பூட்டு.....
புலன்களை பட்டினி போட்டு
ஞானியாய் புடம் போடும்....
பல நேரங்களில்....
நம்மை சாட்சியாக்கும்....
நமக்கு ஆசான் ஆகும்...
குழப்பத்திற்கு தீர்வு ஆகும்....
விடை தெரியாத கேள்விக்கு
விடை ஆகும்....
புலப்படாத ௨ண்மைகள்
புலப்படும்....
நம்மை ஞானி ஆக்கும்...
அனைவரையும் சமமாக்கும் ..
அனைவருக்கும் சமம் ஆவோம்
விதவைச் சூடிய வெள்ளை உடை,
மீட்டாத வீணை,
இரவு நேர கடற்கரை,
மலரா மொட்டு,
மழை விட்டபின் வானம்
இவ்வரிசையில் என் மௌனமும்
புரியாத புதிராய்...