உழவர்கள்
ஏர் ஓட்டும் மக்களுக்கு
ஒருவேளை சோறு இல்லை,!
ஏர் ஓட்டும் மக்களுக்கு சோர்வு மட்டுமே கிடைக்கிறது,
சோறு கிடைப்பதில்லை,!
உடம்பெல்லாம் பொன்னாக அணிந்தும் பலர் அழகாக தெரிவதில்லை,!
ஆனால் இவர்கள் உடம்பெங்கும் மண்ணாக இருந்தும் இவர்கள் தான் அழகாகவே தெரிகிறார்கள்,!
இவர்களின் நிலத்தில் இல்லை சகதியால் கலங்கிய தண்ணீர்,!
இவர்களின் முகத்தில் உண்டு
பலரின் சதியால் கண் கலங்கிய கண்ணீர்,!
சூரியனை கண்ட பனி மறைந்து ஓடிவிடும்,
ஆனால்
சூரியன் மறைந்து ஓடும் வரை இவர்களின் பணி ஓயாது,!
வயதில் கிழவர் ஆனாலும்,
வயலில் உழவர்,!
இவர்களை போற்றுவோம்,!
உழைக்கும் மக்களுக்கு உழவர் தின வாழ்த்துக்கள்,!
-நானஅதிபன்,