நாஸ்திகன் சிவமாகி போனான் (பகுதி-2)
குறிப்பு:சிவம் என்பது பிரபஞ்ச இயக்கமாய் கருதுக.....
-----------------------------------------------------------------------
சுத்த அறிவே சிவனே
சத்தியத்திற்கு தவிக்கும் நல் அகம் தருவாய்
சாந்த நிலையே சிவனே
எனது அகத்தினில் மௌனம் மலரச்செய்வாய்
புத்தியின் பூரணம் சிவனே
புவிமீதினில் என்துக்கதிற்கோர் அரண்அமைப்பாய்
சத்திய ஜோதியே சிவனே
அருள்ஜோதியை எனதறிவினில் ஏற்றிவைப்பாய்
ஓம்கார ரூபனே சிவனே
நல்ஒழுக்கத்தில் எனை நீ ஒழுகவைப்பாய்
சுந்தர ரூபனே சிவனே
சுதந்திர வாழ்வினை எனக்களிப்பாய்
விஸ்வ ரூபனே சிவனே
வீரம் பொதிந்தநல் உடல் தருவாய்
மூலபொருளே சிவனே
முக்தியின் போதனை எனக்களிப்பாய்
தாண்டவரூபனே சிவனே
தமிழ்கவி இயற்றிடும் நல்அறிவமைப்பாய்
அனலாய் ஆகிய சிவனே
ஒளியென திகழும் முகம் தருவாய்
ஆன்ம கடலே சிவனே
ஆன்மஞானம்தனை என்சிந்தையில் புகுத்திடுவாய்
அன்பே சிவனே
ஆசை அறச்செய்து யோகநித்திரை அளித்திடுவாய்
தகிட தகதிமி தகிட தகதிமி தகிட தகதிமி தகிட தகதிமி தகிட தகதிமி தகிட தகதிமி தகிட தகதிமி தித்தோம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் .................