என் சாம்பலும் உன் முகம் தேடும் 555

பெண்ணே...

வானவில் வண்ணம்
கொண்ட சேலை உடுத்தி...

வெண்மேக விழிகள்
கொண்டு வாசலில் நிற்க...

இரவு நேர பௌர்ணமி
பகலில் தோன்றிட...

விடிவெள்ளி வைத்தது
உன் அங்கத்தில்...

ஓர் மச்சம்...

முத்தமிட துடிக்கும் என்
இதழ்களுக்கு தெரியவில்லை...

நீ அக்னியின்
தங்கை என்று...

அக்னியை எண்ணி நீ
சுட்டெரித்தாலும்...

உன்னையே நான்
சுற்றி வருவேன்...

என் சாம்பலும் உன்
முகம் பார்க்க தேடும்...

உணர்வாயா? அபோதாவது
என் காதலை.....!

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (9-Jan-13, 3:37 pm)
பார்வை : 163

மேலே