மரணம்
இப்போதெல்லாம் ஜனனத்துக்கும் மரணத்துக்குமான
இடைவெளி சுருங்கி விட்டது .
நேற்று மதியம் வரை என்னோடு சிரித்து பேசிய மனிதர்
இன்று மண்ணறைக்கு சென்று விட்டார்.
இப்போது தான் பார்த்தேன் பேருந்து நிலையத்திலே
என்னால் நம்பவே முடியவில்லை.
இவையெல்லாம் இன்றைக்கு சாதாரணம் ஆகி போனது
முப்பதுகளின் , நாற்பதுகளின் மரணங்கள் கூட இன்று
ஆச்சரியம் இல்லாமல் ஆகி விட்டது .
இன்று கொலஸ்ட்ராலும் ,சுகரும் , பீ பியும் இல்லையென்றால்
அது அதிசயம் என்றாகி விட்டது .
மனிதனை மறை முகமாய் கொல்லும் இரசாயன சேர்க்கை உணவுகளுக்கு
மரண தண்டனை கொடுப்பது பற்றி மனிதன் இதுவரை சிந்தித்ததாக தெரியவில்லை.
உணவுகளே மருந்துகள் என்ற காலம் மாறி போய்
மருந்துகளே உணவுகள என்றாகி விட்டது
ஆப்பிள் பள பளக்க மெழுகை தடவும் மனிதனும்
மாம்பழம் பள பளக்க கற்களை தேடும் மனிதனும்
மனித உயிரை மசுராக கூட மதிப்பதில்லை.
பத்து நோய்களை இல்லாமால் ஆக்கி விட்டோம் என்று
மார்தட்டும் மருத்துவம் கூட புதிதாக பரப்பி விட்ட
நூறு நோய்களுக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை.
மருத்துவம் புனிதத்தை விவகாரத்து செய்து விட்டு
வியாபாரத்தை விவாகம் செய்து கொண்டது .
இப்போதெல்லாம் ஜனனத்துக்கும் மரணத்துக்குமான
இடைவெளி சுருங்கி விட்டது .
சகோதரத்துவத்துடன்,
முகமது ஷரஃப்