தொந்துறவு(தொந்தரவு+உறவு)

மனைவியின் சித்தப்பாவின்
மைத்துனரின் பெரியப்பாவின்
மகன் என்று ஒருவர்
என் இல்லம் வந்தார்!

எப்படித்தான் கிடைத்ததோ
என் 'விசிட்டிங் கார்டு' அவர் கையில்.

ஏதேதோ வேலை என்றார்.
எங்கெங்கோ அலைய விட்டார்!
மோட்டார் வாங்க வேண்டுமென
மீட்டர் போட்டார் என்னிடத்தில்!

தெரிந்த கடை ஒன்றிற்குக்
கூட்டிச் சென்றேன்.
பெரிய அளவில் பேரம்பெசிக்
குறைந்த விலையில் வாங்கி விட்டார்!

அகமகிழ்ந்து பேசலானார் ,என்
அகம் புகழ்ந்தும் பேசலானார்.
அவரது ஊரின் விலையைவிட
ஐநூறு குறைவு என்று சொன்னார்!

அவரோடு கூடி அலைந்து திரிந்ததில்
என் வீட்டு செலவில் எழுநூறு கூடவே,
வெறுமையாய் சிரித்து வழியனுப்பினேன்
வீட்டுக் கணக்கை எண்ணியபடி!

எழுதியவர் : கோவை ஆனந்த் (9-Jan-13, 11:07 pm)
சேர்த்தது : s.m.aanand
பார்வை : 106

மேலே