மனதால் ஊனமானவர்கள்
ஊனம் என்பது
உடலில் அல்ல !!!
தன் குடும்பத்தை
மறந்து மது,மாதுக்கு
அடிமையானவன் !!!
தான் பத்து மாதம் சுமந்து
பெற்ற பிள்ளைகளின்
எதிர்காலத்தை எண்ணாமல்
தன் விருப்பத்திற்கு வழி மாறுபவள்!!!
தன் அக்கா,தங்கை,அண்ணன்,தம்பி
என தன் உடன் பிறப்புகளின்
வாழ்க்கையை மனதில் கொள்ளாமல்
ஊதறியாக சுற்றுபவன் !!!
தன்னிடம் வசதி இருந்தும்
ஏழை ,எளியோருக்கு
உதவும் மனம் இல்லாதவன் !!!
தன் தாய் ,தந்தையை
முதியோர் இல்லத்தில்
சேர்க்கும் மகன் !!!
காதல் என்ற பெயரில்
ஓர் ஆண் பெண்ணையோ!!!
ஓர் பெண் ஆணையோ
மனதால் காயப்படுத்துபவர்கள் !!!
என ஒவ்வொருவரும்
மனதால் ஊனமானவர்களே !!!