உழவின்றி உலகில்லை (பொங்கல் கவிதைப் போட்டி)
மண்ணைப் பொன்செய்து
விதையை காய்கனிசெய்து
நிலத்தை வெற்றிக்களமாக்கி
தரிசை நீர்க்குளமாக்கி
பயிர்களின் களைநீக்கி
உயிர்களின் பசிநீக்கிக் காக்கும் உழவு!
உழப்பை விதைத்து
உறக்கம் தவிர்த்து
உணவை அறுத்து
உலகிற்குக் கொடுத்து
உள்ளம் பூரித்து
உயர்ந்து நின்றான் உழவன்!
இன்னல் மறந்து
இன்பம் கொடுத்து
இன்செயல் புரிந்து
இன்னும் உழைத்து
இனியும் முயன்று
இன்றளவும் பூக்கும் பூ உழவு!
வந்தாரை ஏற்று
வென்றாராக மாற்றி
வந்தனை செய்து
வந்தவனை வாழச்செய்து
வருமுன் காக்கச்சொல்லி
வாழவைப்பான் எங்கள் உழவன்!!!