தாய் அன்பு !!!

உன் கருவறையில் சுமையாய் வந்த
என்னை சுகமாய் தாங்கினாய் .....
வெளி வந்த எனக்கு உன்
ரத்தத்தையே உணவாய் அளித்தாய் .....
வெள்ளிச் சங்கு எடுத்து எனக்கு
வெள்ளை பாலை ஊட்டினாய் ........
என் மழலை பேச்சுக்கு உன்
முத்தங்களை காணிக்கை ஆக்கினாய்.......
உன் துன்பத்திலும் என்னை நீ
புன்னகை செய்ய வைத்தாய் ............
என்னை நடக்க பழக்க நீ
என்னுடன் தவழ்ந்து வந்தாய் ..........
என் ஒரு விரல் கோர்த்து இந்த
உலகையே எனக்கு காண்பித்தாய் .........
நான் கல்வி பயில நீயும்
என்னுடன் சேர்ந்துப் படித்தாய் ...........
என்னுடன் ஆடிப் பாடி உன்
அன்பை வானம்பாடியாய் தெரிவித்தாய் ..
எனக்காக இத்தனை அவதாரம் எடுத்தாயே !
தாயே !
நீ பெண்ணா ? தெய்வமா ?