தூக்கு தண்டனை .......

.
ஒவ்வொரு நிலவிலும்
தேயும் நம்பிக்கை .
..................................................
கடைசியாய் ஒட்டியிருந்த
வாழ்வின் ஆசைகளும்
கிழிக்கப் பட்டிருந்தது
தேதித் தாள்களுடன் .......
................................................................
தட்டிவிடப்பட்ட
அப்பாவின் நேசங்கள்
தண்டனை வடுக்களாய் ....
சிதைக்கப் பட்டிருந்த
மகனின் உள்ளம் .
---------------------------------------------------
பெற்றவளின்
தன்மான வாழ்வும் சேர்ந்து
ஊசலாடிக் கொண்டிருந்தது
தூக்குக்கயிறுகளில்............
.............................................................
அவளுக்கு மட்டும்
அர்த்தம் குழப்பப்பட்ட
தாலிக்கயிறு ...
.................................
இழிப்பார்வை ,வசை ஏமாற்றம்
யாசிக்கும் இழிநிலை
எத்தனையோ கயிறுகளால்
நிரபராதிக்கும் தண்டனை
நித்தம் நித்தம் ..
கைதியின் மனைவி ...!
...................................................................
ஒவ்வொரு குற்றங்களின்
தீர்ப்புகளில்
தண்டனை பெற்று
கதறுகின்றன ....
தொப்புள்கொடி உறவுகளும் ....!
-------------------------------------
அறுபட்டு விழுமா ..?
குற்றங்களின் கொடுங்கிளைகள்...
வேர்களுக்கள் ஊட்டப்படாமலேயே
உறவுகளின் கண்ணீர் வலிகள் .......!.
.......................................................................

எழுதியவர் : சிந்தா (13-Jan-13, 11:43 am)
பார்வை : 201

மேலே