காயும் ஈரம்...(அகன்,ரமேஷ்,சரவணா)

நேற்றும்...எம் கடல் சார்ந்த பகுதியின்
கண்களின் ஈரம்...வழிந்து வற்றியது..
சில ஈனத் துப்பாக்கிகளால்.

மீன் தேடி..அலைகளில் தவழ்ந்த பயணம்..
தூண்டில் புழு வாழ்க்கையாய்..மீனவனுக்கு.

ஈரம் வற்றிய கடல் நம்பி...
கரைகளில் நிகழ்கிறது கருவாட்டு வாழ்க்கைகள்.

நெய்தல் வாழ்க்கைகள்....
பாலையாய்த் திரிந்து சோரம் போக...
ஈரமற்ற கொடிகள் வோட்டுக்கள் கேட்டு அலைகின்றன.

எழுதியவர் : rameshalam (16-Jan-13, 11:30 am)
பார்வை : 97

மேலே