சாயும் நிலவு (அகன்,ரமேஷ், சரவணா)
எமது கொடியில்...தர்மத்தின் அடையாளம்தான்.
ஒளி திருடிய களங்க நிலவில்லை.
சாயும் நிலவு பதிந்த அந்நியக் கொடியொன்று
சாய்க்கத்துடிக்கிறது எம் இறையாண்மையை.
கண்ணீரால் காத்த வேள்வியை
கருக்கத் துடிக்கிறது பங்காளிப் பகைகள் மூட்டி.
ரோஜாக்களை இரத்தத்துளிகளோடு பூக்கவைத்து
தன் ஓநாய் நாக்குகளை ஈரமாக்குகிறது.
தினம் தேயும் சாய்நிலவின் பௌர்ணமிக் கனவழிக்க...
எப்போதும் தயாராயிருக்கும் எம் ஏவுகணைகள்.