தலைப்புச்செய்தி..
கதிரவனைக்காணவில்லை..
குளிர்ந்த காற்றினிலும்
மரங்கள் உதிர்த்த இலைகளின் அழகினிலும்
பொதுமக்களை மயங்கச்செய்து
மேகங்களின் கூட்டணியோடு
வருணன் செய்த சதியாகவிருக்குமென
இயற்கை செய்திகள் சந்தேகப்படுகின்றன....
கதிரவனைக் காணாத இல்லத்தரசிகள்
கவலையுடன் காணப்பட
அவர்களுக்கு ஆறுதல் அளித்து
விரைவில் கதிரவனை வரவழைப்பதாக
நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...!! :)