மனிதன்... பச்சோந்தியின் நிறம்
மாறும் மனதை மனிதன் கொண்டான்,
மற்றவையெல்லாம் மறந்தே நின்றான்..
மாசும் இங்கே படிந்து விட்டது,
மக்கிப் போன குப்பைக் கூலம் போல..
தேவையென்பது தனிமனித சுகம் தானே,
தேடல் தீரும் அதை அடைந்துவிட்டாலே..
தேவைக்கு மாறும் இம்மனித பிறவி தானோ,
தேகம் முழுக்க போய்ப் பித்தல்கள் தானோ..
ஆட்சி பிடிக்க அறிவும் வேண்டாம்,
ஆள் காட்டி விரலொன்றே அதை பிடித்துத் தரும்,
தாவித் திரியும் குரங்கின் குணம்,
அதுதான் நாடித் துடிப்பு அரசியல்வாதிகளிடம்..
நஞ்சும் கனியும் நிகரெனக் கலந்து,
நட்புப் போர்வைக்குள் நிலையாக ஒழிந்து,
நம்பும் விதத்தில் நாபியைக் கிழிக்கும்,
நயவஞ்சகத் தோட்டம், மனித கூட்டம்..
இக்கரைக்கு அக்கறை பச்சையென்றரியாது,
வக்கிர எண்ணம் தலைவிரித்தாட,
தேவையறிந்து தன்னிலை மாறும்,
மாயை குணம் கொண்டவன் மனிதன் ..
மாற்றமது மனிதர் நெஞ்சில்,
தோற்றம் கொண்டால் தவறேதுமில்லை,
மற்றார்க்கு சீற்றமுன்டாகும் பச்சோந்தி குணம்,
மாந்தரினத்தை இழிவு படுத்திடுமே..