நிறைவேறாத ஆசைகள்
வேடிக்கையாகப் பார்த்த
பொம்மைகளை
விரும்பிக் கேட்டேன்.
வாங்கித்தர முடியவில்லை
அப்பாவால்...
குறைந்தவிலை விசிலை
வாங்கித் தந்து சமாளித்தார்.
அழகான ஐஸ் க்ரீம் கேட்டபொழுது
குச்சி மிட்டாய் வந்தது...
பள்ளிசெல்ல தோள்பை கேட்டபொழுது
துணிப்பை வந்தது....
மழை அங்கி கேட்டபொழுது
நான்காய் மடித்துத் தைத்த
பாலிதீன் கவர் வந்தது....
நான் பெரியவனாகும்வரை
காத்திருக்க வேண்டி வந்தது
குட்டி மிதிவண்டி
எனக்கு சொந்தமாவதற்கு....
என் கண்ணீர் துளிகளுக்குள்
காணாமல் போயிருக்கின்றன
பல கல்வி சுற்றுலாக்கள்!
கல்யாணம் காதுகுத்து விழா
அப்பா போகுமிடமெல்லாம்
அழைத்துச் செல்லச் சொல்லி
ஆசைப்படுவேன்....
விடுமுறை நாளென்றாலும்
விரல்விட்டு எண்ணக் கூடிய
வாய்ப்புகளே தரப்பட்டன!
திருமணமாகி
நான்கு குழந்தைகளுக்கு
அப்பாவாகி விட்டேன்.
இன்றுவரை தொடர்கின்றன
அப்பாவால்
நிறைவேறாத ஆசைகள்
என் குழந்தைகளுக்கும்.......!