கும்பகோணம் தீ விபத்து.
கும்பகோணம் தீ விபத்து
அக்னியை வலம் வந்தேனடி
ஆலமரம் சுற்றினேனடி
இல்வாழ்க்கை அறிந்தேனடி
ஈன்றடுக்க ஐஇருதிங்கள் ஆனதடி
உன்னை வளர்த்தேனடி
ஊர் போற்ற வளர்ந்தாயடி
என் உயிர்ச்செல்லம் நீயடி
ஏடுபடிக்கச் சென்றாயடி
ஐந்து வயது ஆனதடி
ஒன்றாம் வகுப்புப் படித்தயாடி
ஓடி விளையாடும் ஓர் பிள்ளையடி
ஔவைப் பாட்டிக் கதைச் சொன்னாயடி
அஃது என் காதில் ஒலிக்குதடி
இனிகேட்க முடியாதபடி தீயில்நீயும் வெந்தாயடி
கும்பகோணம் தீவிபத்து.