மௌரியர் அரசும்....டுபாக்கூர் தமிழ் மன்னர்களும்...!

மௌரியர் அரசும்....டுபாக்கூர் தமிழ் மன்னர்களும்...!

சங்ககாலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து தாக்கிய வடநாட்டுப்படையை ஆரியப்படை என்பர். அப்படி தாக்கிய பல ஆரிய அரசர்களை புறமுதுகிட்டு ஒட செய்தனர் நம் தமிழ் மூவேந்தர்கள்

வல்லம் என்னும் ஊரில் தாக்கிய ஆரியப் படையைச் சோழர்கள் தோற்றோடச் செய்தனர்.

முள்ளூர் என்னுமிடத்தில் தாக்கிய ஆரியர் படையை மலையமான் திருமுடிக்காரி வேல் கொண்டு தாக்கி ஓடச் செய்தான்.

இவை இரண்டும் பண்டைய தமிழகத்தின் கிழக்குப்பகுதியில் நடந்த தாக்குதல்கள்.

இவற்றைப் போல பாண்டிய நாட்டில் நிகழ்ந்த தாக்குதலை முறியடித்தவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.

மோரியர் தாக்கத்துக்கு மோகூர் பணியவில்லை என எள்ளி நகையாடினர் நம் தமிழ்ப்புலவர்கள் .

சேரன் செங்குட்டுவன் வென்ற கனக, விசயர் வடபுலத்து ஆரிய அரசர்.

சேர அரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆரியர் வாழும் இமயமலை மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான். வணங்குவில் என்னும் தொடர் அம்புடன் வளைந்திருக்கும் வில் என்பதைக் காட்டுகிறது.

சோழரும், ஆரியரும் தாக்கிக்கொண்ட போர் வல்லம் என்னும் ஊருக்குப் புறத்தே இருந்த காவல் காட்டில் நடந்தது. அதில் ஆரியர் படை உடைந்து திரும்பி ஓடிவிட்டது.

முள்ளூர் என்னுமிடத்தில் ஆரியர் வாட்படையுடன் தாக்கினர். மலையன் வில்லெய்து அவர்களை எதிர்கொண்டான். ஆரியர் பலர். மலையன் ஒருவன். ஒன்றாலும் வில்லுக்கு எதிர்நிற்க மாட்டாமல் வாட்படை ஓடிவிட்டது.

மோரிய வம்சத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மோரியராலும் சரி.... இந்தியா முழுவதையும் கைபற்ற நினைத்த, சாம்ராட் என அழைக்கப்படும் அவரது பேரன் அசோகராலும் சரி, தமிழகத்தை அடிபணிய வைக்க இயலவில்லை.

இப்படி எவராலும் வெல்ல முடியாத தமிழகத்தை... தனது சூழ்ச்சியின் மூலம் வெல்ல நினைத்த அசோகர்.... தனது பிள்ளைகளான மகிந்தன் மற்றும் சங்கமித்திரை இருவரையும் புத்த மதம் பரப்புவதற்காகவும்... மோரிய பேரரசின் அடிமைகளாக மாற்ற தென் திசை நோக்கி அனுப்பினார். தமிழகம் இவர்களை புறக்கணித்ததினால் இருவரும் இலங்கையில் புத்த மதத்தை பரப்பினர்.

இந்த வரை படமும் பொய்யான்ன தவல்களை காட்டுகிறது. அவர்களின் நரித்தனத்திற்கு இதுவே சிறந்த எடுத்துகாட்டு. இதை தவறு என்னும் கூறும் நண்பர்கள் சான்றுடன் நிருபித்தால் இந்த பதிவை அகற்றி விட்டு மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன்.

நன்றி
ஒரு பதிவர்..

இவாறு இருக்கிறது இணையத்தில் சொல்லப்படும் வரலாறுகள்....நாம் என்னத்தை சொல்ல...அல்லது எதில் கொண்டு போய் தலையை மோதி வருத்தத்தை வெளிப்படுத்துவது..?

இப்படியெல்லாம் சொல்கிறார்கள் வரலாறுகளை...அல்லது அவர்கள் விரும்பும் ஏதோ ஒன்றை..!

படமும் செய்திகளும் போட்டு விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறார்கள்...ஏன் எனில் அவ்வாறு இருக்கிறது இணையத்தின் டுபாகூர் கூட்டம்... என்றால் மிகையில்லை என்று கருதலாமா...?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-Jan-13, 10:56 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 211

மேலே