கொஞ்சம் உங்கள் சிந்தனைக்கு -2

*********இந்த தலைப்பில் எழுதும் கருத்துக்கள் பெரும்பாலும் நடுத்தர வர்கத்தில் உள்ளவர்களுக்கு பொருந்தும். ***********

பெரும்பாலான பெற்றோர்கள் பெண்ணை வளர்த்தால் போதும், கல்யாணத்தை கட்டி விட்டுவிட வேண்டுமென்று நினைக்கின்றனர். அவர்களுடைய அறிவு சார்ந்த கேள்விகளுக்கு எந்தவிதமான பதிலும் அளிக்க கூடிய நிலையில் நம் இன்றைய குடும்ப அமைப்பு இல்லை. இன்றைய நிலையில் பல பெண்கள் வெளியில் போய் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் எவ்வளவு பெண்களின் வீட்டில் அவள் தன் இஷ்டம் போல் தன்னை வளர்த்து கொள்ளட்டும் என்ற மன நிலையில் உள்ளனர் ?

எனக்கு தெரிந்து இப்போதும் பல விட்டில் பெண்களை கல்யாணம் செய்து கொடுக்கும் வரையில் தம்முடன் வைத்து கொள்ளவேண்டும், அவளை எங்கும் வெளியில் அனுப்பகூடாது என்ற எண்ணம் பரவலாக உள்ளது. அவர்களை வெளியில் அனுப்புவது அவர்களுக்கு பல நல்ல பாடங்களை கற்று தரும். நான் இதை எழுதுவது நல்ல கண்ணோட்டத்தில் தான். நாட்டில் நடக்கும் சம்பவங்களை பற்றி தெரியாமல் இல்லை. நானும் இதைபோல் வீட்டை விட்டு முன்று ஆண்டுகள் வெளியே தங்கி பலவற்றை கற்று கொண்டேன். இதை போல் சந்தர்பங்கள் பல பெண்களுக்கு கிடைப்பதில்லை.

ஒரு ஆணுக்கு எப்படி அவனுடைய ஆசைகளை பூர்த்தி செய்யும் உரிமை இருக்கிறதோ அதேபோல் ஒரு பெண்ணுக்கும் உண்டு. சரிசமம் என்று நான் போராட வரவில்லை. அது வருவதற்கு பல காலம் வேண்டும். இப்போதைக்கு அந்த பாதையை நோக்கி சிறுது பயண படவேண்டுமேன்றே சொல்கிறேன்.

பிள்ளைகளுக்கு கொஞ்சம் வெளியுலகம் தெரிய ஆரம்பித்தவுடனும், அவர்களுடைய சூழல்கள் மாறுபட ஆரம்பித்தவுடனும் அவர்களுடைய எண்ணங்களும் விரிவடைய தொடங்குகின்றன. அப்படியான நல்ல வகையான எண்ணங்கள் குறுகிய மனதுடன் பார்க்கும் மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தும். அதுவே பெற்றோர்களாய் இருந்தால் பிரச்சனை குடும்பத்தில் இடைவெளியை கொண்டு வந்துவிடும்.

ஆகவே நாம் எந்தவொரு மனிதனையும் தனிநபர் என்று நோக்கும் பார்வை வரவேண்டும். அது நம் பிள்ளைகளிடம் கண்டிப்பாக செயல் படுத்த வேண்டும். கணவன் மனைவியானாலும், பெற்றோர் பிள்ளையானாலும், காதலன் காதலியானாலும், எல்லோரும் நம்மை போல மற்றவரும் தனிமனிதனே, அவர்களுக்கும் தனியான விருப்பு வெறுப்புகள் எண்ணங்கள் இருக்குமென்று நாம் நம் பார்வையை பரந்த நோக்குடன் பார்க்க பழகி கொள்ள வேண்டும்.

எழுதியவர் : ஜெயந்தி (29-Jan-13, 4:41 pm)
பார்வை : 205

மேலே