இராஜகுமாரி

இனியவள் என் இராஜகுமாரிக்கு
நலம்! நலன்கேட்க ஆசை !
வருடங்கள் பல கடந்து போன சூழலில்
எப்படி இருக்கிறாய்?

ஆயிரமாயிரம் பூக்களை
பூப்பிக்க செய்து,
உதாசீனப்படுத்தி
உன்னில் அப்பிக்கொண்டிருந்த
என்னை பறித்து உயிர்குடித்த ,
என் உயிர் நீ !

என் புரசு பூக்கள் பரவி
பூத்து உதிர்ந்து
விதைகள் காய்க்க துவங்கியருக்கிறது
புல்லினம்களும் பட்டம்பூசிகளும்
வந்தமரும் என்னுள்
நீயில்லாமல்.
உன் நினைவுகள் மட்டும்

ஆத்மாவின் அழகு பூக்கள்
நீயில்லாமல்
பூக்க மனமின்றி
பொசுங்கி போய்விட்டது
இனி ஒரு வசந்த காலத்திலாவது
நீ வருவாயா......?

காத்திருக்கிறேன் !!!!!!!!!!!
என் இராஜகுமாரி
காலம் கடந்து.

எழுதியவர் : இராதிவர்ம தமிழ்நாடன் (30-Jan-13, 1:48 pm)
சேர்த்தது : radhivarman.7
பார்வை : 119

மேலே