பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்
![](https://eluthu.com/images/loading.gif)
சுள்ளிப்பூ அழகென்று
சூடி மகிழ நினைப்போர் யார்..?
கள்ளிப் பூ அழகென்று
அள்ளி எடுத்தோர் யார்...
பூ நாகம் புகுந்த
மலர்ச் செண்டில்
புதுக்கொண்டை
அலங்கரித்தோர் யார்..?
பூவையர்கள் புத்தழகு
ஆனாலும் ,மணமுடிக்கும்
நிகழ்வென்றால் ...
பொருத்தமது வேண்டும்,
பொருந்தப்பார், ....(சோதிடம் தவிர்.)
(கலாச்சாரம் ,ஒத்துணர்வு,இன்ன பிற )
அடிவேர் தாங்கிடினும்
ஆலமரம் விழுதில் வேர் ஊன்றும்.
பொருந்திவிட ...குடைபோல் தழைத்து
குலமதுவும் பரப்பும். குறை பரப்புமா..?
'ஆல் போல் தழைத்து அருகுபோல் வேர் ஊன்றி '