அன்று ஒரு நாள் அதே வனத்தில் . . .

ஒரு நாள்
மலர்கள் நிறைந்த
வனத்தில் நின்றிருந்தேன்
உன் காலடியோசை கேட்டது

என்னை தான் ஏந்த வருகிறாய் என
நினைத்து அவசர அவசரமாய்
ஆடை திருத்தி நின்றேன் - ஆனால்
கை நிறைய மலர்களை மட்டும்
கொய்து சென்றாய்

என் கன்னங்களில் கண்ணீர் மழை

மறுநாளும் நான் அங்கேயே
நின்றிருந்தேன்
உன் காலடியோசை கேட்டது
மலர்களைத் தான் கொய்வாய்
என நினைத்தேன் - ஆனால்
மடி நிறைய என்னை அள்ளிக் கொண்டாய்

நேற்று ஏன் ஏமாற்றினாய்
என சிணுங்கினேன் - அதற்கு
முதலில் உன் வெட்கத்தை
களைந்தேன் - பிறகு
உன்னை - - - - - என்றாய்

என் கன்னங்களில் வெட்க மழை. ,

எழுதியவர் : honey (31-Jan-13, 11:49 am)
சேர்த்தது : honeywing
பார்வை : 111

மேலே