உயிரெழுத்தே காதல்

அ-ன்பு என்ற சொல்லும் காதல்
ஆ-சை வந்து அலைவதும் காதல்
இ-ன்பம் என்ற இச்சையும் காதல்
ஈ-ர்பு என்ற காந்த சக்தியும் காதல்
உ-யிர் என்ற உன்னத வார்த்தையும் காதல்
ஊ-டல் என்று மோகம் கொள்வதும் காதல்
எ-ன்பது வயதானாலும் காதல் செய்வதும் காதல்
ஏ-ழனம் செய்யாத உள்ளமும் காதல்
ஒ-ன்பது வருடமானாலும் காத்திருப்பதும் காதல்
ஓ-டாய் தேய்ந்தாலும் வெளராக்கியம் கொள்வதும் காதல்
ஒள-வை ஆனாலும் காதல் என்றும் காதல்
ஃ-புரியாத புதிர்தான் காதல் காதல் காதல்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (1-Feb-13, 6:01 am)
பார்வை : 130

மேலே