நெஞ்சங்கள் வாழ்த்திடும்

தாயோ தன் வேலையில் மூழ்கிட
தந்தையோ தம் தொழிலை கவனிக்க
மகனோ மறந்தும் திசை திரும்பாது
சிந்தை சிதறாமல் சிறிதும் தளராமல்
வருங்கால வாழ்வை மனதில் கொண்டு
சாலையில் பார்வை சற்றும் படாமல்
அமைதியின் உருவாய் அடக்கமுடன்
அன்றைய பாடத்தை எழுதிடும் பாங்கு
அறிவொளியாய் திகழ அடித்தளம் அமைய
மனதை நிலைநிறுத்தி அமர்ந்துள்ளதே
வளமான வாழ்விற்கு வழி வகுத்திடவும்
மாணவன் மண்ணில் எல்லாம் பெற்று
ஞாலம் போற்றும் ஞானியாய் விளங்கிட
விழைகின்ற நெஞ்சங்கள் வாழ்த்திடும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Feb-13, 7:47 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 136

மேலே