என்ன செய்வது? - இப்படிக்கு இல்லத்தரசி..
தினமும் மாலை நேரம் ரசித்து..!!
இரவு எதிர்நோக்கி..ஈர மனதுடன்..!!
காத்திருந்து சுகம் கானல் அக்காலம்..!!
இன்றோ.. மாலை வந்தால்..!!
குழந்தைக்கு வீட்டுபாடம்..!!
கணவருக்கு காபி தண்ணி..!!
இரவு உணவு எல்லோர்க்கும்..!!
படுக்கையில் உறக்கம்..!!
பத்து மணிக்கே..வந்துவிட..!!
இரவாவது.. ஈர மனதாவது..!!
வார கடைசியின் ஓர் இரவிற்காக..!!
வாரம் முழுதும் காத்திருக்கும் இல்லத்தரசி..!!
-என்ன செய்வது..!!