எங்கே.. எங்கே...

இடுப்பினில் பிள்ளை-
இவள் தேடிக்கொண்டிருப்பதும்
இதைத்தான்..

இடுப்பளவு தண்ணீரில் நின்று
இவன் கேட்கிறான்,
குடிப்பதற்கு ஒரு
குவளை தண்ணீர்..

உச்சிவெயில் மண்டையைப் பிளக்கையில்,
வெளியே உட்கார்ந்து
ஒளியைத் தேடுகிறான்..

உள்ளது மனிதா அமைதி
உன்
உள்ளத்திலேதான்,
ஊரெலாம் அலையாதே
ஓடி அதைத் தேடி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Feb-13, 1:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 93

மேலே