சுவடுகள்

நினைவுகளின் கைதிகள் நாம்
தொடர்ந்து வரும் நிகழ்வுகளின்
அதகமான நேரங்களில்
உணர்வுகளால் நெருக்கப்படுகிறோம்
இன்னொன்றில்
நெருடல்களால் புதையுண்டுபோகிறோம்
வரையறைக்குள் வரைய முடியாது
தோற்றுப் போய் கைவிடப்பட்ட
கற்பனைகளின் ஓவியங்களுக்குள்
தேங்கிக் கிடக்கிறது
சில மரித்துப் போன நொடிகள்......