ராஜபக்சே முகத்தில் உமிழச் செய்வோம்.
ரத்தச் சகதியிலே
கொத்து கொத்தாய்
தாலி பறித்தவனை
எந்த தெய்வம்தான் ஏற்குமடா?
முட்டாளே!
ரத்த சிவப்பில் நடை போட்ட
பித்தன் ராஜபக்சே!
இந்தியா விரித்து வைத்த
ரத்தினக் கம்பளத்தில் நடந்து வந்து
புத்தன் முன் கை கூப்பும்
சிறப்பு காட்சி பார்
நல்ல
சிரிப்பு காட்சி பார்
என் தமிழா!
உலகிற்கு அஹிம்சை சொன்ன
கௌதமன் காதுக்குள்ளே
கதை சொல்ல வந்தானா?
கயவன் ராஜபக்சே!
சுற்றும் உலகிற்கு
கண்ணியம் என்பதனை
கற்று தந்தவனை-
தமிழால்
பெற்று தந்தவனை
கண்ணீர் புதைகுழியில்
தள்ளிப் புதைத்தவனை
தாங்கி பிடிக்கிறதே
டெல்லி ராஜாங்கம்!
உனக்கு சொல்லி புரியாதா?
நமக்கும் தான்
நல்ல சொரணையும்
கிடையாதா?
அரசியல் சொறி சிரங்கில்
ஆனந்தம் கண்டவனை
குப்பை போல்
அள்ளி அகற்றிவிடு!
தமிழா!
இனி
உலகத்து நாட்டுக்கெல்லாம்
ஒவ்வொன்றாய் மனுச் செய்வோம்.
சுரக்கும் உமிழ் நீரை
சேகரித்து
ராஜபக்சே முகத்தில்
உமிழச் செய்வோம்.
தமிழா!
ஐ. நா. விழித்து எழ
அடிக்கடி மனுப்போடு!
அதன்
அடிநாக்கில் வசம்பு பூசி
அவசியத்தை பேச விடு!
ஐ. நா. வே! ஐ. நா. வே!
உயிர் வாழ
உரிமை பறித்தவனின்
உள்நாக்கை அகற்றி விடு!
ஊமை சனங்களின்
உரிமையை மீட்டுக்கொடு!
விடுதலை என்பது வேட்கை!
யாம் வேண்டுவது எல்லாம்
எம் மக்களுக்கு
உரிமை நிறை வாழ்க்கை!
இதை வழங்க மறுப்பவனோடு
தீராது நம் பகை!