இராப் பொழுதுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
இப்பொழுதெல்லாம் இரவுப்பொழுதுகள் அதிகமாக வலிக்கின்றன
விடியலை நம்பிய நீண்ட இரவுகளை போல் விடியலினூடே களையும் வலிகளும்,
வியாபித்த உலக நிகழ்வுகள் வலிகளை கூட்டும் போதும் விரும்பும் போதனைகள் என்றும் ஆறுதலாய்.
வியர்வையை உரமாக்கும் உழவனின் உடல் இறுதியில் உளுமிடத்து உரமாவதை போல் வெளிநாட்டு உழைப்பும்.,
சந்தோசம் என்கின்ற போர்வை மட்டுமே வெளிநாடுகளில் மலிவு விலை கொடுத்தும், பெரும்பாலான மத்திய கிழக்கில் இலவசமாக பெற்றுக்கொள்ளும் ஒன்று.
மண்ணுக்கும் மனிதனுக்கும் மதிப்பளித்த உள்ளங்கள் கட்டுநாயகாவில் தாழிடப்பட்டு அதிஉயர் பாதுகாப்பில்,
அழிக்கப்பட்ட மத உணர்வுகளுடன் பெரும்பாலும் காயங்களுக்காக மண்டியுடுகிறோம்,
கொத்து கொத்தாக இழந்துவிட்ட கொள்கைகளுடன் விடைகான முடியாத எதிர்காலத்தை எதிர்நோக்கிய பயணத்தில்.,
பாதையின் தூரம் வழியில் தெரியும் என்பதுபோல் காத்திருக்கும் பயணிகள் நாம் பொதிகளின்ரி.
தெரிந்து கொண்டு விழுந்த தெளிந்த நெருப்புக்குள் வெளிவர முடியாமல் தவிக்கும் நான்
காத்திருக்கும்,
மபாஸ் பரீத்.