நீ பூமியின் சுவாசம்
காதலே ...
எப்போது பிறந்தாய் நீ ...
வரலாறு உண்டா
உன் வடிவத்திற்கு ...???
மனிதர்கள் ஜனித்த
மறுகணமே நீயும் ஜனித்தாயோ ?
இனம் புரியாத
இந்த உறவு ..
எப்படி தொடங்குகிறது ?
பார்வையிலா ..ஸ்பரிசத்திலா..?
எது உன் விதை..?
ஏழை ... பணக்காரன்
எல்லோர் வீட்டிலும் உன் தாண்டவம் ..!!
கண்களில் விழுந்து
உயிர்வரை வியாபிக்கிராயே ..
நீ விஷமா..அமுதா ..??
உன்னை தொடவே
உலகத்தின் விரல் நீள்கிறது ...!!
தீயையும் தேனையும்
ஒரே நேரத்தில் ஊற்ற முடிகிறது
உன்னால் ..????
தொட்டால் தளிராகிறாய்...
விட்டால் தாடியாகிறாய்...???
உன் முளைப்பின் முடிவென்ன ???
நீ
உலகத்தை உற்சாகப்படுத்த வந்தவளா ..?
உத்திரவாதம் தரமுடியாது உன்னால் ...!!
புரிந்து விட்டது ...
நீ உயிரல்ல ..வெறும் உணர்வு ...
சிலபேருக்கு நீ உணவு ...!!
நீ விருந்து என்பதால் விடமுடியவில்லை ...
மருந்து என்பதால் மறக்கமுடியவில்லை ..
நீ அன்பின் வெளிப்பாடு ...
மூடமுடியாது உன்னை ...
நீ ஆசையின் இடர்பாடு
விடமுடியாது உன்னை ...
நீ ஸ்வரமா... ? வரமா ???
இல்லை ..
உணர்ந்தவருக்கு புரியும்
நீ பூமியின் சுவாசம் ....!!