காதலா காமமா..............................!

காலணா கூட பெறாத விசயங்களுக்கு கூட
காலரை தூக்கும் இன்றைய இளைஞர்களே
வணக்கம்....!

இன்று நீ செய்து கொண்டு இருப்பது காதல் தான
அவசரப்பட்டு ஆம்!என்று கூறாதே நன்றாக
சிந்தித்து பதில் சொல்.....!

இல்லை இல்லவே இல்லை .....
தன்னுடைய பொழுதுபோக்கிற்கு
சிறுவயதில் கையில் தவழும் பொம்மையை
காசு கொடுத்து வாங்கினாய்.......!

இன்று உன் உடம்பில் தவழ
ஒரு உயிருள்ள பெண் பொம்மையை
காதல் கொடுத்து வாங்குகிறாய்......!

அன்று வாங்கிய பொம்மையை
உன் ஆசை தீர அனுபவித்து விளையாடி விட்டு
குப்பையில் வீசினாய்......!
இன்றும் அதை தானே செய்கிறாய்......!

முத்தம் என்பது அன்பை வெளிக்காட்டும்
ஒரு அழகிய சூழ்நிலை.....!
அதையும் உன் காம சூழ்நிலைக்கு
பயன்படுத்துகிறாய்......!

இது காதல் அல்ல இன்றைய
இளம் காதலர்களே! காமம்.......!

உன் கேவலமான காம இச்சையை
தீர்த்து கொள்ள நீ உபயோகப் படுத்தும்
வார்த்தை தான் காதலா......!அல்லது

உன் காம விளையாட்டிற்கு நீ கொடுக்கும்
விலை தான் காதலா............!நன்றாக சிந்தித்து
பதில் சொல்.

நான் அனைத்து இளைஞகர்களே கூறவில்லை.காதலை தவறாக பயன்படுத்து கின்றவர்களுக்கு மட்டும் தான்.

எழுதியவர் : alaigal (13-Feb-13, 7:24 pm)
பார்வை : 156

மேலே