காதல் சுமைதாங்கி

என் காலக்குறிப்பு புத்தகத்தை (டைரி) எடுத்துப்பார்த்தேன்
அதில்
"இன்று அவளிடம். எப்படியாவது என் காதலை
சொல்லியாக வேண்டும் என்று என் மனதில் உள்ளதை
கடிதமாக எழுதிக்கொண்டு கொல்லையில் பூத்திருந்த
ரோஜா ஒன்றையும் பறித்துக்கொண்டு அவள் வரும்
வழியில். காத்திருந்தேன் மூன்று வருட முயற்சி இன்றோடு
ஒரு ுமுடிவு கட்ட வேண்டும். வாழ்வு. அல்லது சாவு
அவள் மருத்து விட்டால் செத்துப்போயிடறதுங்கற முடிவோடதான் நின்றேன் ..அப்பா.. அவள் தூரத்தில்
வருவது ..அப்பா.. தெரிந்தது அப்பாஆஆஆ... காதுல மிஷினா
மாட்டுங்க ..அம்மாவுக்கு. திதி குடுக்கனும் சீக்கிரம்
கிளம்புங்க ..என்னதான் இருக்கோ அந்த டைரியில 15 வருஷமா தினமும். பார்த்துகிட்டு இருக்கீங்க. .சொல்லி விட்டு சென்ற என் மகன்னுக்கு
தலையாட்டி விட்டு மெல்ல வருடிக்கொடுத்தேன் இன்றும் என் காதலை
சுமக்கும் என் நாட்குறிபை ....

எழுதியவர் : ஆ.சுதா (19-Feb-13, 9:56 am)
சேர்த்தது : சுதந்திரம்
பார்வை : 168

மேலே