என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் ....
ஈழம் வேண்டும் ஈழத்தமிழனை போல
ஆழமாய் வேண்டுகிறேன்
நீ பேசும் வார்த்தைகளை நான் .....
வாழைப்பழத்தின் வழவழப்பை விட
குழை குழை என் குழைந்து போகின்றேன்
உன் கொஞ்சும் வார்த்தைகளை கொஞ்சம் கேட்டிட...
கோழையாய் கூடு பாயுகிறது
வேல் கம்பையும், வீச்சரிவாளையும்
வீரமாய் எதிர்கொண்ட என் மனம்
உன் வார்த்தைகளுக்காக ...
யாழினை மீட்டி யாழினி வந்தால் மட்டுமல்ல
யார் இனி வந்தாலும்
என் கவனம் ஈர்க்க முயலும் முயற்சி பாழ் தான்
தாழ் திறந்த சொர்க்கமாய்
நீ வாய் திறந்திருக்கும் பொழுது ..
வாழ்வாங்கு வாழ வேண்டிய ஆசை எல்லாம்
அடையாளமே இல்லாதபடி ,
உன் இனிமை சுனாமியில் சிக்குண்டு
கூழ்கூழாகி போனது ,
உன் தேன் பேச்சை நான் கேட்க துவங்கியதும் ...
நிதிநிலை, மனநிலை,ஊன்நிலை உட்பட
என் சூழ்நிலையே முழுமுழுக்க பாழ்நிலையில்
உன் தேன் நினைவில் , நானிள்ளது போகும் சில நொடிகளில் .......
சூழ்மதியாளர் தம் சூனிய சொற்களையும் சொக்கி போய் ரசிக்கின்றது
உன் சுந்தர நினைவுகள்
என் மனதை சூழ்ந்திருக்கும் பொழுதுகளில் ...