ஓட்டத்தின் ரணம்

ஆளரவமற்ற ரயில் நிலையம்
அவ்வப்போது
தனிமையில் பேசிக்கொள்ளும்
காலி இருக்கைகள்
நடு உச்சி வெயில் தெரியாமல்
நடை மேடையில் உறங்கிய படி
சில நாய்கள்
ரயில் வருவதைக்கண்டவுடன்
இருக்கையோடு போய்
அஞ்சியொடுங்கிறது மற்றொரு நாய்
ரயில் சத்தம் கேட்டதும்
குரைக்க ஆரம்பித்துவிடுகிறது
நொண்டி நாய் ஒன்று,
இரயிலோடு
நடைமேடை முடிவு வரை
ஓடி திரும்புகிறது
இன்னொரு நாய்
முன்னங்கால் குத்தி இளைப்பாறிய கணம்
அடுத்த ரயில் வந்ததும்
அதே தூரம் ஓடித்திரும்புகிறது
அந்த நாய்,
ஒவ்வொரு ஓட்டமும்
ஒவ்வொரு முறையும் வேறுபடுகிறது
ஒவ்வொரு ஓட்டத்திற்குப் பின்னும்
விளங்கிக்கொள்ள முடியாத
ஏதோ ஒரு ரணமிருக்கிறது.

எழுதியவர் : -வாலிதாசன்- (26-Feb-13, 3:08 am)
சேர்த்தது : mukavaivaalidhasan
பார்வை : 109

மேலே