வல்லினக் காற்றே 4B2
தென்றலாய் நசைகொண்டாய்
தென்பொதிகைத் தமிழென்றெண்ணி
தவநிதியாய் என்னுள் ஏற்றேன்....
எத்தொழிலும் எனில் மறந்தன
செத்தொழியும் நாள் வரையில்
இத்திரையில் துணையென்றாய்.......
மெல்லின இதமான வருடல்
வல்லினமாய் கடிந்தது ஏன்..... ?
இடையினமாய் மன்றாடினேன்
கடி புயலாய் மறுதலித்தாய்
மாற்றம் கண்டு மருளிய நான்
வெற்று உடலாய் விலகிச் சென்றேன் .......
பற்று கொண்டு மீண்டும் ஏனோ
பக்கம் வந்து வீசுகிறாய்
பாசாங்கு செய்து கெஞ்சுகிறாய் .....
மீண்டும்..........
வஞ்சப் புயலாய் மிஞ்சினால்
அஞ்சி ஒஞ்சி துஞ்சிடாமல்
வஞ்சி உன்னை விஞ்சிடுவேன்........
கவிதாயினி அமுதா பொற்கொடி