சாம்பல் ! -------------
அப்படியே இருக்கிறது
நீ
என் வீடு எரித்தச் சாம்பல் !
இருந்தபடியே இருக்கிறது
நீ
என் உறவின் உடல் எரித்தச் சாம்பல் !
பேசிய படியே இருக்கிறது
நீ
என் நாட்டை எரித்தச் சாம்பல் !
ஆனால் மூடியே வைத்து இருக்கிறது
நெருப்பை இந்த ச்சாம்பல் !